கனடாவில் தமிழர் கொலை; மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம்

இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கனடாவில் கொலைசெய்யப்பட்ட சம்பவமானது கனடாவின் புகலிடக் கோரிக்கைச் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக கடனாவின் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர் கிருஸ்ணகுமார் கனகரட்னம் என்பவர் அண்மையில் தொடர் கொலையாளி புரூஸ் மெக்ஆத்தர் என்பரால் கொலை செய்யப்பட்டார்.

இந்தவிடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த கொலை கனடாவின் புகலிட சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

அதேபோன்று, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வதிவிட வசதியை பெற்றுக் கொடுத்திருந்தால் இந்தக் கொடூரக் கொலை இடம் பெற்றிருக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த அமைப்புகள், இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.