பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை நடைமுறைப்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை: ஜஸ்டின்.

பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்தினார். இதன்போத அவர் மேலும் கூறுகையில், பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை.  குறிப்பாக எதிர்காலத்தில் எமது பிள்ளைகளும், எமது சந்ததியும் சிறந்த, தூய்மையான காற்றினை சுவாசிப்பார்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது, நம் அனைவரினதும் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என கூறினார்.

190இற்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டுள்ள பரில் உடன்படிக்கையில் புவி வெப்பமாதலை 2 மற்றும் 3 பாகை செல்சியஸ் அளவினால் கட்டுப்படுத்துவதற்கு ஒப்புக்கொளளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.