ஒன்ராறியோவில் மிதமான நிலநடுக்கம்!

தென் – மேற்கு ஒன்ராறியோவில் நேற்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

அமெர்ஸ்ட்ட்புர். ஒன்ராறியோ, வின்ட்சர் தெற்கு பகுதியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிலநடுக்கம் அமெரிக்காவின் பகுதியிலும் உணரப்பட்டதாகவும், குறித்த நிலநடுக்கத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.