ரொறன்ரோ தீவிபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

ரொறன்ரோ கிழக்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.


சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

டான்ஃபோர்த் அவனியூ மற்றும் கிரீன்வூட் அவனியூ பகுதியில், ஸ்ட்ராத்மோர் பொலிவார்டில் அமைந்துள்ள ரொறன்ரோ நகர குடியிருப்பு மாடிக் கட்டடத்தின் 13ஆவது மடியில் நேற்று (புதன்கிழiமை) இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டும் குறித்த இந்த குடியிருப்புக் கட்டடத்தில் மிக மோசமான தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.