கனடாவில் மிதமான பொருளாதார வளர்ச்சி

கனடாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் மிதமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்னுரைத்துள்ளது.

இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் அது 2 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இந்த வளர்ச்சி வீதமானது கடந்த ஆண்டில் இருந்ததைக் காடடிலும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கனடாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்ததுடன், கனடாவின் கடந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் கனடாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிப் போக்கைக் நோக்கி இருப்பதாக எதிர்வு கூறப்படுகின்றமை கவலை அளிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனினும் அனைத்துலக அளவிலான இந்த ஆண்டுக்கான பொருளாதார நிலைமை வளர்ச்சிப் போக்கினை நோக்கி எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 3 சதவீதமாகவும், உலக அளவிலான சராசரி பொருளதார வளர்ச்சி 3.9 சதவீதமாகவும் காணப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.