அரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிட அனுமதி மறுப்பு: மக்கள் விசனம்

ஹம்போல்ட் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கனடா தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட அனுமதிக்காததால் ஒன்ராரியோ நகர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கம்யூனிட்டி சென்டர் முன்பிருந்த கொடியை மக்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். இதற்கு அந்நகரத்தின் மேயர் Shaun McLaughlin மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்கள் அவர் மீது மக்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த மேயர், சஸ்காட்ச்வான் விபத்து கொடூரமான சோகமெனினும் அதற்காக கனடா கொடியை தாழ்த்திப் பறக்க விடுவது நகரக் கொள்கைகளில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.