ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி வந்த கப்பல் அழிக்கப்படுகிறதா?

ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி வந்த எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து, கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் தற்போது பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊடகங்கள், குறித்த கப்பலில் தற்போது மிருகங்கள் வசிப்பதாக தெரிவித்துள்ளன.

எனினும், அந்த கப்பலை என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், 492 ஈழ அகதிகளுடன் குறித்த கப்பல் கனடாவை வந்தடைந்தபோது, பொலிஸார் குறித்த கப்பலை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.