உயிரிழந்த ஹொக்கி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தும் கனேடியர்கள்

கனடாவையே உலுக்கிய ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி வீரர்களின் பேருந்து விபத்தில், உயிரிழந்த வீரர்களுக்கு கனேடியர்கள் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் முகமாக, குறித்த ஹொக்கி வீரர்கள் அணிந்த ஆடையை அரசியல்வாதிகள், வாகன சாரதிகள், மாணவர்கள் மற்றும் ரொறன்ரோ வாசிகள் அனைவரும், அணிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அத்தோடு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டுவிட்டரிலும் பல்வேறு ஆஷ் டெக் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சனிக்கிழமை ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி கனிஷ்ட அணியை ஏற்றிச் சென்ற பேருந்து சாஸ்கட்சுவான் மாகாணத்தின் டிஸ்டேல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இதில் உயிரிழந்தவர்கள் 10 பேர் அணி வீரர்கள் எனவும் ஏனையோர் முறையே, 2 பயிற்றுவிப்பாளர்கள், பேருந்து சாரதி, சுயாதீன புள்ளிவிபரவியலாளர் மற்றும் ஒளிபரப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

29 பேர் குறித்த பேருந்தில் பயணித்திருந்த நிலையில், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.