இளவரசர் ஹரியின் காதலி வசித்து வந்த வீடு விற்பனை!

பிரித்தானிய இளவரசர் ஹரியை காதலித்த காலத்தில், அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் வசித்த கனேடிய வீடு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயற்றப்பட்ட ‘சுயிட்ஸ்’ நாடக தொடரில் நடித்து வந்த போது, பாதர்ஸ்ட் பகுதியில் நடிகை மேகன் மாக்கிலின் குடியிருந்த வீடே தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யார்மத் வீதி பகுதியிலுள்ள மேகன் மெர்க்கல் வசித்துவந்த வீடு இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள் மற்றும் இரண்டு கார்களை நிறுத்த வசதியுள்ள மார்பிள் பதித்த தரையைக் கொண்ட வீடாகும்.

யார் இந்த வீட்டை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை என்பது குறித்த தகவல்கள் எவையயும் வெளியிடப்படவில்லை.