பாலியல் சீண்டல் புகாரையடுத்து மிச்செல் ஹாரிஸ் நீக்கம்

கனடாவில், ஒன்டோரியோ மாகாணத்தின்,ப்ரோக்ரேஸ்ஸிவ் கான்செர்வ்டிவ் பார்ட்டி (PC) கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மிச்செல் ஹாரிஸ் (Kitchener-Conestoga MPP Michael Harris) மீது எழுந்த பாலியல் சீண்டல் புகாரையடுத்து கட்சி உறுப்பினர் கூட்டத்திலிருந்து (caucus) நீக்கப்பட்டார்.

வெளியிடப்பட்ட செய்தியின் படி,பாதிக்கப்பட்ட பெண் மிச்செல் ஹாரிஸின் கீழ் பணியில் இருப்பவர், இவருக்கு தொடர்ந்து அலைபேசி குறுஞ்செய்தி மூலம் பாலியல் சீண்டல் செய்ததற்கான சான்றுகளோடு சிக்கியிருக்கிறார்.

இதனால் இவர் கட்சி பதிவியிலும் இருக்க இயலாது ,மீண்டும் மாரு தேர்தலிலும் போட்டியிடவும் முடியாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.