ஸ்டர்லைட் பிரச்சனைக்கு எதிராக கனடா வாழ் தமிழர்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் ஸ்டர்லைட் பிரச்சனைக்கு எதிராக கனடா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

டொரோண்டோவில் உள்ள இந்திய துணை தூதுவராலயத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், “எங்கள் சுவாசம். அசுத்தம் செய்யாதே” என்ற வாசகங்கத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டர்லைட் நிறுவனம் அசுத்தத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.