ரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் அதிவேக ரயில் சேவை

புதிய அதிவேக ரயில் சேவை ஒன்று ரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் 2025ல் ஆரம்பமாகும் என ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார்.

இச்சேவைக்கு சமீபத்திய மாகாணத்தின் வரவு செலவு திட்டத்தில் 11பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 10-ஆண்டுகள் முதல் கட்ட வேலை திட்டத்திற்காக இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டம் யூனியன் நிலையத்தையும் லண்டன் ஒன்ராறியோவையும் 73நிமிடங்களில் இணைக்கும்.

இத்திட்டம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் மக்கள் வசிப்பதற்கும் தெரிவு செய்யும்; வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

புதிய பாதையில் ரயில் வண்டிகள் மணித்தியாலத்திற்கு 250-கிலோ மீற்றர்கள் வேகத்தில் ஓடும்.

தரிப்புக்கள் லண்டன், கிச்னர், குவெல்ப் மற்றும் ரொறொன்ரோ அத்துடன் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு இணைப்பை கொண்டு அமையும்.

இரண்டாவது கட்டத்தில் பாதை வின்ஸ்ரர் மற்றும் சத்தாம் வரை நீடிக்கப்படும். முதலாவது கட்டம் பூர்த்திசெய்ய மூன்று ஆண்டுகள் செல்லும். 2025ல் சேவைகள் ஆரம்பிக்க படும் என வின் தெரிவித்துள்ளார்.