கனடாவில் ஹொக்கி வீரர்கள் விபத்துச் சம்பவம்: டொனால்ட் டிரம்ப் இரங்கல்

கனடாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஹொக்கி வீரர்கள் 14 பேர் உயிரிழந்தமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொள்வதாகத் தனது டுவிட்டரில் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கனடாவில் ஹொக்கி வீரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இது குறித்துக் கனடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ருடோவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன் எனப் பதிவிட்டுள்ளார்.

கனடா நாட்டில் உள்ளூர் ஹொக்கிப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று ஜுனியர் அணி வீரர்கள் பேருந்தில் சென்றனர். இதன்போது சஸ்கெட்சாவன் (Sasketchaven) மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் எதிரே வந்த டிரக்குடன் மோதியதில் 14 ஹொக்கி வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.