கனடாவிற்குள் கடந்த வார இறுதியில் மட்டும் 600 இற்கும் மேற்பட்டோர் நுழைவு

கனடாவிற்குள் கடந்த வார இறுதியில் மட்டும் 600 இற்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக கனடிய எல்லை பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள், அமெரிக்க – கனடிய கியுபெக் எல்லையின் வழியாக கனடாவிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க குடிவரவு கொள்கைக்கு பயந்தே இவர்கள் கனடாவிற்குள் நுழைவதாக அண்மைய கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் நைஜிரியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.