வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு TTC சிறப்புச் சலுகை

TTC போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும், வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்தோருக்கு, போக்குவரத்துக் கட்டணத்தில் சிறப்புக் கழிவு வழங்கப்படும் புதிய திட்டம் ஒன்று நேற்றிலிருந்து (April 04, 2018) நடப்பிற்கு வருகின்றது.

ஒன்ராறியோ தொழிலாளர்கள் திட்டம் அல்லது ஒன்ராறியோ உடற்குறைபாடுடையோர் ஆதரவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவோர், இந்த புதிய பயணக் கட்டணக் குறைப்புத் திட்டத்தின்கீழ் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதன்கிழமையிலிருந்து நடப்புக்கு வரவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாளாந்த மற்றும் மாதாந்த பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் ஏறக்குறைய 1,50,000 ரொரன்ரோ பயணிகளுக்கான பயணக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு கழிவு வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் Presto அட்டைகளை வைத்திருப்போர், இன்றிலிருந்து தனியொரு பயணச் சீட்டில் இரண்டு டொலர்கள் வரையிலான கழிவினை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், மாதாந்த கட்டணமும் 115 டொலர்கள் வரையில் குறைவடையவுள்ளது.

அதேவேளை மாதாந்த போக்குவரத்து அட்டைகளைப் பெறுவோருக்கான கட்டணம் தொடர்ந்தும் மாதத்திற்கு நூறு டொலர்களுக்கும் அதிகமான தொகையையே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.