கடுமையான காற்றினால் தடைப்பட்ட மின் விநியோகங்கள்

நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக ரொரன்ரோ நகரின் பல பாகங்களிலும் மின்விநியோகங்கள் துண்டிக்க்பபட்ட நிலையில், தற்போது அவற்றில் பெரும்பாலாவர்களுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் இந்த மின் துண்டிப்பினால் பாதிக்க்பபட்ட நிலையில் இரவு முழுவதும் தங்களின் பணியாளர்கள் மேற்கொண்ட திருத்த வேலைகளினால் இன்று வியாழக்கிழமை காலையில் 110 பேரைத் தவிர ஏனையவர்களுக்கான மின் விநியோகங்கள் சீர் செய்யப்பட்டுவிட்டதாகவும் அது விளக்கமளித்துள்ளது.

நேற்றைய இந்த காற்றினால் கிட்டத்தட்ட 21,000 வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக ரொரன்ரோ ஹைட்ரோ முன்னர் தெரிவித்திருந்தது.

நேற்று பகல் வேளைகளில் திருத்த வேலைகளை வேகமாக முன்னெடுக்க முடிந்த போதிலும், மாலை வேளையிலும் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தமையால் தமது பணியாளர்கள் பலத் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் அது கூறியது.

இதேவேளை இந்த சூறைக் காற்று காரணமாக மிசிசாகா மற்றும் ஹமி்ல்ட்டன் பகுதிகளில் சுமார் 15,000 பேருக்கான மின் வினியோகமும், வோன் பகுதியில் சுமார் 10,000 வாடிக்கையாளர்களுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.