பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களை தாக்கிய குற்றச்சாட்டில் விசாரணைகள் ஆரம்பம்

மொர்னிங்சைட் அவன்யூ (Morningside Avenue) மற்றும் லோறன்ஸ் அவன்யூ (Lawrence Ave) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பொதுமக்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இரு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸ் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி அரங்கேறிய இச்சம்பவம் தொடர்பான காணொளி, இணையத்தில் வைரலாக பரவியதன் பின்னணியிலேயே ரொறன்ரோ பொலிஸ் அதிகாரிகள், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறித்த காணொளியில், அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றின் முகப்பு மாடிப் பகுதியில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமக்களை அடக்க முயல்வதும், மற்றொரு உத்தியோகத்தர் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும் பதிவாகியுள்ளது.

எனினும், எதற்காக குறித்த பகுதிக்கு பொலிஸார். வரவழைக்கப்பட்டனர், என்ன காரணத்துக்காக பொதுமக்களுடன் தகராறில் ஈடுப்பட்டனர் என்ற விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இதனால் இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை கண்டறிய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.