கனடாவில் ஆட்டிஸம் நோய் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கனடாவில் 66 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் ஆட்டிஸம் நோய் தொற்றியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொது சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

அதில், கனடாவில் 5 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 66 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிஸம் எனும் மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் சதவீதம் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்விற்கு மொத்தம் ஆறு மாகாணங்களும், ஒரு பிரதேசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக நியூ பவுண்ட்லேன்ட் மற்றும் லெப்ரோடர் பகுதிகளில் 57 குழந்தைகளுக்கு ஒன்று எனவும், யுகோனில் 126 குழந்தைகளுக்கு ஒன்று எனவும் இதன் சதவீதம் உள்ளது.