முனைவர் நடராஜனுக்கு அஞ்சலி நிகழ்வு

மாவீரர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றத்தினை இந்தியாவில் நிறுவுவதற்கு பத்து ஏக்கர் நிலம் வழங்கி முன்னின்று உழைத்த தமிழ் பற்றாளரும், ஈழத்தமிழர் மீது அதீத பாசமும் கொண்ட இலக்கியவாதியான முனைவர் அ. நடராஜன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுரோ தமிழிசைக் கலாமன்றத்தில் கனடா தமிழ் வானொலி அறிவிப்பாளரும், கனடிய தமிழர் தேசிய அவையின் ஊடகப்பேச்சாளருமான தேவா சபாபதி தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் கல்விமான்கள், கனடிய பொது அமைப்பின் பிரதிநிதிகள், கனடிய அரச அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ஈழவேந்தன் மற்றும் நாடு கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சு திரு. நிமால் விநாயகமூர்த்தி, ஊடகவியலாளர்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்.