ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக Doug Ford தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக Doug Ford தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிக நீண்ட நேர இழுபறியின்பின் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டீன் எலியோட், வழக்கறிஞரும் வர்த்தகருமான கரோலைன் முல்ரோனி, முன்னாள் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், பெற்றோர் உரிமைகள் செயற்பாட்டாளர் தான்யா கிரானிக் அலென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.