ரூபவாஹினி வருகை நிறுத்தப்பட்டது.

மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து CTC ( கனடியத் தமிழர் பேரவை) ஸ்ரீலங்கா அரச ஊடகமான ரூபவாஹினியை தமது நிகழ்வுக்கு அழைப்பதை நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து CTC ( கனடியத் தமிழர் பேரவை) யின் ஊடக அறிக்கை.

அன்பின் கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நலன் விரும்பிகளே!

எமது தைப்பொங்கல் இரவு விழாவை ஒளிபரப்புவதற்கு ரூபவாகினியின் தமிழ்ச்சேவை விடுத்த வேண்டுகோளுக்கு கனடியத் தமிழர் பேரவை (“பேரவை”) அனுமதி வழங்கியமை பற்றி சனவரி 3, 2018 அன்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.

கனடியத் தமிழர் பேரவையானது ஆரம்பத்தில் இருந்தே கனடாவிலும், தாயகத்திலும் வாழும் தமிழர்களுடைய நலனை முன்னிறுத்தி சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது.

2009 ஆயுதப் போராட்ட முடிவிற்குப் பின்னராக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான வன்செயல்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கவும், நீதியான தீர்வினை வழங்கவும் வலியுறுத்தி வருகிறது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டும் துரிதகதியில் அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வேலைத்திட்டத்தில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தினால் இயற்றப்பட்ட தீர்மானம் 30/1 (நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள்) இனை நிறைவேற்றக் கடுமையாக உழைத்து வருகின்றோம்!

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்தல், காணமால் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்தல், வடக்கு-கிழக்கு வாழ் தமிழர் வாழ்வாதார, வணிக மேம்பாட்டை உறுதி செய்தல் போன்றவை எமது செயற்திட்டங்களில் முக்கியமானவை! அத்தோடு புதிய அரசியலமைப்பு ஒன்றின் உருவாக்கத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றோம். இலங்கை வாழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவினால் தான் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றமானது சாத்தியமாகும்.

ரூபவாகினிக்கு எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய வழங்கிய அனுமதி தொடர்பாக எமது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகளைச் சந்தித்தோம். அவர்களது கருத்துகளை சிரத்தையோடு கேட்டறிந்தோம். பெரும்பாலானோர் தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் சகல தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இருந்தும் ரூபவாகினி, தமிழ்ச்சேவையின் எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்கான வேண்டுகோளைப் பேரவை ஏற்றுக்கொள்வதற்கான காலம் இதுவல்ல என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்கள்.

இக்காரணங்களை முன்னிட்டு ரூபவாகினியின் தமிழ்ச்சேவை கனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்ளாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களே, நலன்விரும்பிகளே, உங்கள் கருத்துக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு உண்மையுள்ள,

இயக்குனர் சபை
கனடியத் தமிழர் பேரவை

On January 3rd, 2018, we sent an email to all our members with respect to permitting Rupavahini’s Tamil service to cover our 11th Annual Thai Pongal Gala.

Since its inception, CTC has been championing the issues of Tamils in Canada, Sri Lanka and globally. In addition, we have advocated against the human rights violations that took place in Sri Lanka. Since the end of the war in 2009, we have been at the forefront in calling for accountability and justice for war crimes and crimes against humanity committed in Sri Lanka.

While the engagement with the Government of Sri Lanka for peace and justice is important, we continue to challenge the current government in meaningful ways on their lack of progress on accountability and other areas of the UNHRC Resolution 30/1. We have given our support to further any positive changes happening for Tamils in Sri Lanka, including stressing speedy response on missing persons, release of military-occupied private lands, release of prisoners, improving the economic capabilities of Tamils in the Northern and Eastern Provinces of Sri Lanka, and most importantly, implementation of the current constitutional reform in Sri Lanka. Constitutional reform is only possible if a significant majority of Sri Lankans support it.

With regards to permitting Rupavahini to cover our event, we have met with several of our members, supporters and well-wishers.. We have carefully listened to their viewpoints. Most agreed with us that it was important to engage and help further the initiatives being undertaken in Sri Lanka, but felt it may not be the right time for Rupavahini’s Tamil service to cover our annual dinner. Accordingly, we would like to inform our members and supporters that Rupavahini will not be present to cover our dinner. We thank all our members and well-wishers for their input and continued support.

Yours Sincerely,

Board of Directors

Canadian Tamil Congress