பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் 80வயது முதியவர் கைது

ஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 80 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Richview Park குடியிருப்பு பகுதியில், Farley Crescent Drive மற்றும் Callowhill Driveவில் நேற்று இரவு 9.30 அளவில் இநத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக கிடைக்கப்பெற்ற அழைப்பு ஒன்றினை அடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற வேளையில், அங்கே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து குறித்த அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக நேற்று இரவே கருத்து வெளியிட்டிருந்த ரொரன்ரோ காவல்துறையினர், குறித்த அந்த சம்பவம் கொலை என்று இன்று காலையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.