நெடுஞ்சாலை 401இல் விபத்து: இருவர் பலி!

நெடுஞ்சாலை 401இல் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், Warden Avenue பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து சம்பவித்து்ளளது.

குறித்த அந்த வீதி வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து, பறந்து சென்று கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

ஒரு வாகனம் மட்டும் தொடர்பு பட்டுள்ள இந்த விபத்தில், அந்த வாகனத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் விபத்தில் உயிரிழந்தவர்களது பெயர், வயது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேவேளை இந்த விபத்தினை அடுத்து நெடுஞ்சாலையில் Warden Avenue வுக்கும் Kennedy வீதிக்கும் இடைப்பட்ட பகுதி மூடப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அதேபோல நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய அதிவேக வழித்தடத்தில், Leslie பகுதியில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.