ரொறன்ரோவின் புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் (அண்ணாமலை மனோகரன்) காலமானார். மட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவில் கலைஞர் அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். ரொறன்ரோவில் திறமையால் புகழ்பெற்ற கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் கலைஞர் மனோகரன். அன்னாருக்கு எம் இறுதி வணக்கம்.Read More →

மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து CTC ( கனடியத் தமிழர் பேரவை) ஸ்ரீலங்கா அரச ஊடகமான ரூபவாஹினியை தமது நிகழ்வுக்கு அழைப்பதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து CTC ( கனடியத் தமிழர் பேரவை) யின் ஊடக அறிக்கை. அன்பின் கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நலன் விரும்பிகளே! எமது தைப்பொங்கல் இரவு விழாவை ஒளிபரப்புவதற்கு ரூபவாகினியின் தமிழ்ச்சேவை விடுத்த வேண்டுகோளுக்கு கனடியத் தமிழர் பேரவை (“பேரவை”) அனுமதி வழங்கியமை பற்றி சனவரி 3, 2018 அன்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.Read More →

அட்லான்டிக் கனடாவை இன்று மிக மோசமான பனிப்புயல் தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து பாகங்களிலும் பனியுடன் கூடிய காற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், சில வேளைகளில் அது மணிக்கு 140 கிலோமீட்டர் வரையில் செல்லக்கூடிய வாய்புகளும் உள்ளதாகவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பனிச் சூறாவளி என்று கூறப்படும் இந்த பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து இன்று கனடாவை வந்தடைவதாகவும்,Read More →

ஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 80 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Richview Park குடியிருப்பு பகுதியில், Farley Crescent Drive மற்றும் Callowhill Driveவில் நேற்று இரவு 9.30 அளவில் இநத சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக கிடைக்கப்பெற்ற அழைப்பு ஒன்றினை அடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற வேளையில், அங்கே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைRead More →

கறுப்பு ஜூலை இனச் சுத்திகரிப்புக்கு ஓர் ஆண்டு முன்னதாக, 1982ம் ஆண்டு, இலங்கை அரசால் பாராளுமன்றச் சட்டத்தினூடாக முழுமையான பரப்புரை ஊடகமாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி ரூபவாகினி ஒரு சுதந்திர ஊடகமல்ல. ரூபவாகினி தொலைக்காட்சி ஊடகமானது, அதன் உருவாக்க காலத்திலிருந்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே செயற்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. மாறி மாறி அரசமைக்கும் சிங்களத்துக்கு ஓர் ஊதுகுழலாகவேRead More →

நெடுஞ்சாலை 401இல் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், Warden Avenue பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து சம்பவித்து்ளளது. குறித்த அந்த வீதி வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து, பறந்து சென்று கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஒரு வாகனம் மட்டும் தொடர்பு பட்டுள்ள இந்த விபத்தில், அந்த வாகனத்தில்Read More →

சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘ரூபவாகினி’ தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் மற்றும் மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைப்பு ஆகியன வன்மையாக எதிர்க்கின்றன. இவ்விடையம் குறித்து கடந்த 31.12.2017 அன்று ரொரன்ரோவில் ஊடச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இவ்வமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவிலயாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கை வருமாறு: ‘பௌத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘ரூபவாகினி’ தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத்Read More →

ஈரானில் அந்த நாட்டு அரசுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் போராட்டம் குறித்து கனடா வெளியிட்டிருந்த கருத்துக்கு, ஈரான் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனடாவின் இந்த நடவடிக்கையானது, தமது நாட்டில் இடம்பெறும் விவகாரத்தில் தேவையின்றி தலையீடு செய்யும் ஒரு போக்கினை காட்டுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கனடாவின் இவ்வாறான செயற்பாடானது, அனைத்துலக நியமங்களை மீறும் நடவடிக்கையாக காணப்படுவதாகவும், எந்தவித நீதி முறைமைகளையும் பெறுமதியற்றதாக ஆக்குவதாகவும் உள்ளது எனவும்Read More →

பொலித்தீன் பைகளின் பாவனைக்கான தடை நேற்றைய நாளிலிருந்து மொன்றியல் நகரில் நடப்புக்கு வருகிறது. பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கும் இந்த திட்டம் நீண்டகாலமாகவே பேசப்பட்டுவந்த நிலையில், கனடாவில் இவ்வாறான தடையை நடைமுறைப்படுத்தும் முதல் பெருநகரமாக மொன்றியல் நேற்று திங்கட்கிழமையிலிருந்து இந்த தடையினை அறிமுகப்படுத்தியுள்ளது. நகர் முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை உத்தரவின்படி, 50 மைக்ரோன்ஸ்க்கு குறைவான தடிப்பினை உடைய அனைத்துவிதமான பிளாஸ்டிக் பைகளையும் வினியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிளாஸ்டின்Read More →