NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்ததக உடன்பாட்டு விவகாரத்தில் காணப்படும் நிலையற்ற ஆரோக்கியமற்ற தன்மை காரணமாக சில கனேடிய நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக NAFTA தொடர்பிலான பேச்சுக்களில் இன்னமும் குழப்பங்கள் நீடிப்பதுடன், குறித்த அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்தும் கவலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆறு சதவீதமான கனேடிய நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்கா நோக்க நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய ஏற்றுமதிRead More →

இன்று அதிகாலை வேளையில் ஸ்காபரோவின் Birch Cliff குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர். Glen Everest வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 11ஆவது மாடியில், இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தனைச் சென்றடைந்த வேளையில், அந்த கட்டிடத்தில் இருந்து பெருமளவு புகை வெளியேறியவாறு காணப்பட்டதாகவம், 11ஆவதுRead More →

ரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும்அவருடைய மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். Apotex நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான பர்ரி ஷேர்மனும் அவரது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில், நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், குறித்த அந்தRead More →

வன்கூவரில் ஏற்பட்டுள்ள வீட்டு விலை அதிகரிப்பும், வாடகை அதிகரிப்பும், அதற்கு கட்டுப்படியாகாத பல முதியவர்களை வீதிகளுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள வீட்டு வாடகையை செலுத்த வசதியற்ற பல முதியவர்கள், தங்க வீடுகள் அற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலரும் ஒன்றாக சேர்ந்த தற்காலிக தங்குமிடங்களிலும், வாகனங்களிலும், வீதிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வருமானம் அற்ற அல்லது குறைந்த வருமானம் ஈட்டும் முதியவர்கள், இவ்வாறு வீடுகளை விட்டு வெளியேறும் நிலைRead More →

சித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்வதனைத் தடை செய்வதாக கனடா அறிவித்துள்ளது. குறிப்பாக கனேடிய இராணுவம், பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலத்திரனியல் உளவு அமைப்புகள் இவ்வாறான தகல்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் தடை செய்யப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள கனேடிய மத்திய அரசாங்கம், ஏனைய நாடுகளில் சித்திரவதைகளுக்கு பயன்படக்கூடிய, அல்லது துன்புறுத்தல்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய தகவல்களை, அவ்வாறான நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதனை தவிர்க்கவுள்ளதாகRead More →

தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு்ளள மர்ம நோய் ஒன்று விரைவில் கனடாவையும் தாக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இந்த அபாயகரமான நோய், ஏற்கனவே மூன்று கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, கனேடிய மருத்துவ சமூகம் இவ்வாறான கவலையினை வெளியிட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடருமானால், உலகிலேயே மிகவும் ஆபத்தான இந்த ஒட்டுண்ணி நோய், எதிர்வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான கனேடியர்களை தாக்கக்கூடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.Read More →

கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி மார்க் மச்சின் மற்றும் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  நேற்று (வெள்ளிக்கிழமை) புது டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் முதலீட்டை மேற்கொண்ட கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் ஓய்வூதிய நிதி 6 பில்லியன் டொலர்களை முதலிட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிRead More →

St. Lawrence Market பகுதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Church street மற்றும் Front street பகுதியில், நேற்று பிற்பகல் 12.35 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஊர்தி ஒன்றினால் மோதுண்ட நிலையில், 23 வயது பெண் வாகனத்தின் கீழ் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், இதன் போது 26 வயது ஆண்Read More →

ரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும், அவருடைய மனைவியும் நோர்த் யோர்க்கில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அந்த விட்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில், நேற்று முற்பகல் 11.45 அளவில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு விரைந்ததாக ரொர்னரோ காவல்துறையினர் தெரிவித்தனர். அங்கு இருவரது சடலங்கள்Read More →

1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவின் காஸ்டகோ என்ற பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் கிளைகள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், தைவான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட்ட பல்வேறு இடங்களில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையத்தில் கனடாவில் உள்ள கடை ஒன்றில் குறித்த நிறுவனத்தின் உலக உருண்டை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆதில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல்Read More →