இணைய பாதுகாப்பை வலியுறுத்தும் கனேடிய இராணுவம்!

இணைய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது.


கனேடிய பாதுகாப்பு திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அவ்வாறான தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள், முற்கூட்டிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயற்படும் முறை உள்ளிட்ட விடயங்களில் கனேடிய பாதுகர்பபு தரப்புக்கு தனிப்பட்ட, நீண்டகால பயிற்சித் திட்டங்கள் மூலம் விளக்கமளிக்கப்படவேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன போர் முறைகளில் தீவிரமடைந்துவரும் இணையம் மூலமாக நடவடிக்கைகள் தொடர்பில் கனடா உள்ளிட்ட நேட்டோ அமைப்பின் பங்காளித்துவ நாடுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய கோட்பாடுகளுக்கு அமைய, இந்த பலம்பொருந்திய இணைய பாதுகாப்பு மேம்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கனேடிய இராணுவம் நவீன இராணுவ உத்திகளுக்கு ஏற்ப தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக ஏற்கனவே பெருமளவு தொகையினை முதலிட்டுள்ள போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் சிக்கல் நிறைந்த இணைய பாதுகர்பபு நடைமுறைகளில், கனடா இன்னமும் மேம்படுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் கனடாவின் பாதுகாப்பினை முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, இராணுவ, ஆயுத தளபாட, தொழில்நுட்ப, முறைகளில் மட்டுமின்றி இணைய பாதுகாப்பு நடைமுறைகளிலும் மேம்பர்டுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.