ரொறன்ரோவின் முதல் பெண் மேஜர் தனது 93 ஆவது வயதில் மரணம்!

ரொறன்ரோவின் முதல் பெண் மேஜர் ஜூன் றோலான்ட்ஸ் தனது 93 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். நீண்ட கால பராமரிப்பில் இருந்த இவர் கடந்த வியாழக்கிழமை (21) இரவு இயற்கை எய்தியுள்ளதாக இவரது மகள் தெரிவித்துள்ளார்.


1976 ஆம் ஆண்டு மாநகரசபைக்கு தெரிவானதில் இருந்து இவரது நீண்ட கால அரசியல் மேஜராகும் வரை நீடித்தது. 1991 ஆம் ஆண்டு மேஜராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1994 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

மேலும் கவுன்சிலராக இருந்த காலத்தில் நகரத்தின் வரவு செலவுத்திட்ட தலைவராகவும், ரொறன்ரோ போக்குவரத்து கமிஷன் மற்றும் மெட்றோ போலிட்டன் ரொறன்ரோ பொலிஸ் கமிஷன் ஆகியவற்றின் முதல் பெண் தலைமை அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

மேலும் தற்போதைய மேஜர் ஜோன் ரொறி தெரிவிக்கையில் “றோலான்ட்ஸ் வழி கண்டுபிடித்து கூட்டிச் செல்லும் ஒருவர்” என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.