மெக்சிக்கோ விபத்தில் நான்கு கனடியர்கள் உயிரிழப்பு!

மெக்சிக்கோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு கனடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று (புதன்கிழமை) மாயன் இடிபாடுகளிற்கு கப்பல் பயணிகளை ஏற்றிச்செல்கையில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் அமெரிக்கர்கள் நால்வர், இரண்டு சுவீடன் நாட்டவர்கள் மற்றும் மெக்சிக்கோ நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.