உற்பத்தித்துறையின் விற்பனை எதிர்பாராத அளவு வீழ்ச்சி: கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்

கனடாவில் உற்பத்தித்துறையின் விற்பனை கடந்த ஒக்டோபர் மாதத்தில் எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த ஒக்டோபர் மாதத்தில் உற்பத்தித்துறை விற்பனைகள் எதிர்பாராத அளவில் 0.4 சதவீத வீழ்ச்சியினைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக வாகன உற்பத்தித் துறையில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளதாகவும், எனினும் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிப் பாகங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் சில வாகன துறை சார் தெரிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதத்தில் இரசாயான பொருட்கள் விற்பனையும் 1.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இயந்திர பொருட்களின் விற்பனையும் 1.4 சதவீத வீழ்சசியைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.