விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உலக வரைபடத்தால் சர்ச்சை!

1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவின் காஸ்டகோ என்ற பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகும்.

இதன் கிளைகள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், தைவான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட்ட பல்வேறு இடங்களில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையத்தில் கனடாவில் உள்ள கடை ஒன்றில் குறித்த நிறுவனத்தின் உலக உருண்டை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆதில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் வரைபடம் “Made in China” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை அவதானிக்கும் போது காஷ்மீர் ஒரு தனிநாடு போல் உள்ளதுடன் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி போல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மீது கனடாவில் வாழும் இந்தியர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.