கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு!

கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி மார்க் மச்சின் மற்றும் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  நேற்று (வெள்ளிக்கிழமை) புது டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


கடந்த 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் முதலீட்டை மேற்கொண்ட கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் ஓய்வூதிய நிதி 6 பில்லியன் டொலர்களை முதலிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி வருடாந்த வர்த்தகம் 2015 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இந்தியாவுடன் கனடாவின் வர்த்தக பரிமாற்றம் 2014 ஆம் ஆண்டிலிருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் அளவு ஒப்பீட்டளவில் சிறிதாகவே உள்ளது.