கனடாவின் கோடீஸ்வரர் ஒருவரும் மனைவியும் சடலமாக மீட்பு

ரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும், அவருடைய மனைவியும் நோர்த் யோர்க்கில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அந்த விட்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில், நேற்று முற்பகல் 11.45 அளவில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு விரைந்ததாக ரொர்னரோ காவல்துறையினர் தெரிவித்தனர்.

அங்கு இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களது பெயர் விபரங்கள் குறித்து காவல்துறையினர் உடனடியாக தகவல்களை வெளியிடாத போதிலும், குறித்த அநத இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதனை ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் நேற்று உறுதிப்படுத்தினார்.

Apotex நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான பர்ரி ஷேர்மனும்(இவ்வாறு உயிரிழந்துள்ளமை பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தினை சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வகைப்படுத்தியுள்ள காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் விசாரணைகள் இன்னமும் ஆரப்ப கட்டத்திலேயே இருப்பதானல், வெளியிடுவதற்கு அதிகளவு விபரங்கள் தற்போதைக்கு இல்லை எனவும் அவர்கள் தெரவித்துள்ளனர்.

இதேவேளை தமது நிறுவனத்தின் தலைவரது இழப்பினை அறிந்து தாம் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக Apotex நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.