லோரியர் கிளப் விடுமுறை வரவேற்பு

லோரியர் கிளப் விடுமுறை வரவேற்பு (Laurier Club Holiday Reception) ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் (National Gallery of Canada) நேற்று முன்தினம் டிசம்பர் 12, 2017 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது. இதில் கெளரவ. ஜஸ்ரின் ட்ரூடோ (Hon Justin Trudeau) மற்றும் சோஃபி ட்ரூடோ  (Sophie Trudeau) ஆகியோர் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கனேடியர்களுக்கான உண்மையான மாற்றத்தை வழங்கும் வகையில், லாரியர் கிளப் கொடையாளர்களும் பிரமுகர்களும் கனடாவின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டாவாவில் இந்நிகழ்வுக்காக கூடினார்கள்.

லாரியர் கிளப் என்பது வணிக நிர்வாகிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் தாராளவாதக் கட்சியை (Liberal Party) ஆதரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கனடா குடிமக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் பொது கொள்கை முடிவுகளில் ஆர்வமுள்ள ஒரு தேசிய அமைப்பாகும்.

இந்நிகழ்வுக்காக டொரோண்டோவில் இருந்து வர்த்தகப்பிரமுகரும் நீண்டகால தாராளவாதக் கட்சி (Liberal Party) செயல்பாட்டாளருமான லோகன் ராசையாவும் மற்றும் அவருடன் சில தமிழ் வர்த்தக பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.