ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீட்டு விலைகள் நான்கு சதவீதம் அதிகரிப்பு

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் கடந்த மாதத்தை விட நவம்பர் மாதத்தில் வீட்டு விலைகள் கிட்டத்தட்ட நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக வருட இறுதியில் வீடுகள் விற்பனையாவது மந்த கதியிலேயே நகரும் என்ற போதிலும் நடப்பு வருடத்தின் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வீடு வாங்குபவர்கள் அனைவரும் காப்பீட்டு அடமானங்களுடன் வீதங்கள் அதிகமாக இருப்பினும் இன்னமும் தங்கள் கடனை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் தகைப்பு சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதினாலேயே அவர்கள் முன்கூட்டியே வீடுகளை வாங்குவதற்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை டிசம்பர் மாதம் இந்த வீடு விற்பனை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.