தவறாக குப்பை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம்

வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் குப்பை தொட்டியில், தவறான குப்பைகளை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.


மீள்சுழற்சிப் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படும் தொட்டிகளினுள் அதற்குள் போடக்கூடாத ஏனைய குப்பைகளைப் போடுவதால் அதனைப் பிரித்து எடுக்க ரொறன்ரோ நகரசபையினருக்கு பல மில்லியன் டொலர்கள் செலவீனம் ஏற்படுவதாலேயே நகர நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

ஒவ்வொரு வீடுகளிலும் சேரும் குப்பைகள், உணவுத் துகள்கள் தனித்தனியான கொள்கலன்களில் வீட்டுக்கு வெளியே வைக்கும் பொழுது நகரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் குறிக்கப்பட்ட தினங்களில் சேகரித்துச்செல்வது வழமை.

இதே போன்று மீள் சுழற்சிப்பயன்பாட்டுக்கான கடதாசிகள், பிளாஸ்டிக் உபகரணங்கள் யாவும் பிரத்தியோகமான நீல நிற தொட்டிகளில் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.