35 ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோவில் திருடப்பட்ட ஓவியம் நியூயோர்க்கில் பிடிபட்டது

நியு யோர்க் ஏலமொன்றில் ஆயிரக்கணக்கான டொலர்களை பெற இருந்த ஓவியம் திருடப்பட்டதென கண்டு பிடிக்கப்பட்டது.  35 வருடங்களிற்கு முன்னர் இந்த ஓவியம் திருடப்பட்டுள்ளது.


19ம்நூற்றாண்டின் எண்ணெய் ஓவியம் ஒன்றை தாங்கள் ஏலத்தில் விட உள்ளதாக தெரிவித்தனர்.  மத்திய ஐரோப்பிய நாடான Czech ஐ சேர்ந்த அன்ரோனியெட்டா பிரென்டெய்ஸ் (ANTONIETTA BRANDEIS, Czechoslovakian, 1849-1910) என்பவரால் வரையப்பட்டது.  இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் துறைமுக நகரத்தின் சித்திரமாகும். ஏலத்தில் 10,000 டொலர்களிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

Ada Perihana
Toronto police records clerk Ada Perihana scrolls through computer records.

ஆனால் ஏல இல்லம் இந்த ஓவியத்தை பார்த்ததும் 1982ல் ரொறொன்ரோவில் திருட்டு போன ஓவியம் குறித்து இன்ரபோல் வெளியிட்டது போன்றதென அறிந்து ரொறொன்ரோ பொலிசாருடன் தொடர்பு கொண்டது. ரொறொன்ரோ பொலிசார் தங்களின் திருட்டு போன ஆவண பதிவுகளை சரிபார்த்தனர்.

நீண்ட காலமாகியதால் கணனி பதிவுகள் கிடைக்கவில்லை. விசாரனை ரொறொன்ரோ பொலிஸ் கிளார்க் அடா பெரிஹானாவின் கைக்கு சென்றது. இவர் ரொறொன்ரோ பொலிஸ் பதிவுகள் மேலாண்மை சேவைகள் துறையில் பணிபுரிபவர்.

தூசு படிந்த பழைய மைக்ரோபிலிம்ஸ்களை ஆராய்ந்து ஓவியத்தின் தலைப்பு வரைந்தவரின் பெயர் திருட்டு போன திகதி போன்ற தகவல்களை தெரிந்து கொண்டார்.

14மணித்தியால தேடுதலின் பின்னர் அவரால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏலம் இடம்பெறும் நாளிற்கு முதல் நாள் இவர் தேடிய விபரம் கிடைத்தது.

ரொறொன்ரோ குயின் வீதி கிழக்கில் அமைந்துள்ள கலை காட்சி கூடத்தில் இருந்து இரண்டு ஓவியங்கள் திருடப்பட்ட விபரம் தெரிய வந்தது.

அடுத்த நடவடிக்கை இவற்றின் சரியான சொந்த காரரை கண்டுபிடிப்பது மற்றும் திருட்டு போன இன்னுமொரு ஓவியத்தை கண்டுபிடிப்பதுமாகும்.