பாகிஸ்தானில் கனேடிய பெண் கொலை : குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கனேடிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கின் தீா்ப்பு அறிவிக்கப்பட்டது.


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 40 வயதான ராஜ்விந்தர் கவுர் கில் (Rajvinder Kaur Gill) என்ற பெண் தொழில் விடயமாக பாகிஸ்தான் லாகூரில் தங்கியிருந்துள்ளார்.

அங்கே வைத்து கவுரை கடத்திய மர்ப நபர்கள் அவரை கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசியதுடன் கவுரிடமிருந்து 5 மில்லியன் டொலர் பணம் மற்றும் மடி கணணியையும் திருடியுள்ளனர்.

குறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு நடந்து வந்துள்ள நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான ஹபீஸ் ஷாசாத்தை நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன் ஹபீஸ் ஷாசாத் மீதான குற்ச்சாட்டு சரியாக நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாஹித் கசன்பர் என்பவர் மீது கனடா நீதிமன்றில் தொடர்ந்தும் வழக்கு நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.