தமிழ் பெண் கொலை, கணவர் கைது! டொரோண்டோவில் சம்பவம்!

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) Scarborough Malvern (Toronto, Canada) பகுதியில் யாழ். அளவெட்டி செட்டிச்சோலை வடக்கைப் சேர்ந்த தமிழரான இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஜெயந்தி சீவரட்னம் (46) கொல்லப்பட்டுள்ளார்.


இந்தக் கொலை குறித்த குற்றச்சாட்டில் இவரது கணவரான கதிர்காமநாதன் சுப்பையா (45) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jayanthy Seevaratnam, 46, died in hospital after suffering unspecified injuries on Tuesday. Her husband has been charged with second-degree murder.

மோர்னிங்சைட் மற்றும் மக்லிவன் அவென்யு (Morningside and McLevin Ave) அருகே 50 Empringham Dr என்ற இடத்தில் ஒரு டவுன்ஹவுஸ் (Town House) வளாகத்தில் மதியம் 1:40 மணிக்கு ஒரு மருத்துவ அவசர அழைப்பிற்கு சென்ற அவசர மருத்துவ குழுவினர் ஜெயந்தி சீவரட்னம் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் எனவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்றும் அவரது மரணமானது அவரது உடலில் இருந்த பல காயங்களின் விளைவாக (A post-mortem examination determined the cause of death was a result of multiple injuries,) இருந்தது என்று முதற்கட்ட பிரேத பரிசோதனை தெரிவிக்கின்றது என இன்று வியாழக்கிழமை போலீஸ் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தினமே கணவர் கதிர்காமநாதன் சுப்பையா (45) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர்மீது கொலை குற்றச்சாட்டு (Kathirgamanathan Suppiah has been charged with second-degree murder) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

கொல்லப்பட்ட ஜெயந்தி சீவரட்னம் அவர்கள் Alexander Stirling இளநிலைப் பாடசாலையில் மதிய உணவு மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் எனத் தெரியவருகின்றது.  இவரின் மரணத்தை அடுத்து இவர் கடமையாற்றிய பள்ளிக்கு வெளியே கொடிகள் அரைக் கம்பத்தில் குறைக்கப்பட்டது (The flags outside the elementary school have been lowered to half-mast).

ஜெயந்தி சீவரட்னம் ஒரு அர்ப்பணிப்பு மிக்க தாயாகவும் பழகுவதற்கு மிகவும் இனிமையாகவும் இருந்ததாகவும்,  ஆனால் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா குடித்துவிட்டு வந்து பிரச்சனை பண்ணுவதாகவும் எப்பொழுதும் அந்த வீடு ஒரு கலகமான வீடாக இருந்ததாகவும்  அந்த குடும்பத்தில் சில ஆண்டுகளாக கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் கடந்த ஆண்டுகளில் இவர்களின் வீட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் அயலவர்கள் கூறுகிறார்கள்.