400 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

டொரொண்டோவில் இந்த குளிர்காலத்துக்கான முதல் பெரிய பனிப்பொழிவினால் 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் பியர்ஸன் விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.


கடந்த 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் 400 விமானப்போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட குளிர்காலத்துக்குரிய முதல் பனிமழைப்பொழிவினை சந்தித்துள்ள கனடா, எதிர்வரும் நாட்களில் பனிப்புயலினை எதிர்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதனை முகம்கொடுப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென கனேடிய சுற்றுச் சுழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது