நான்கில் மூன்று தொகுதிகள் ஆளும் லிபரல் கட்சி வசம்!

கனேடிய நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ள நான்கு தொகுதி வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் கடந்த திங்கள் நடைபெற்றது. இத்தேர்தலில் நான்கில் மூன்று தொகுதிகள் ஆளும் லிபரல் கட்சி வசமாகியது.


ஒன்ராறியோவில் Scarborough-Agincourt (Jean Yip) தொகுதி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் South Surrey-White Rock (Gordie Hogg) தொகுதி, Newfoundland and Labradorஇல் Bonavista-Burin-Trinity (Churence Rogers) தொகுதி ஆகியன ஆளும் லிபரல் கட்சி வசமாகியது. சாஸ்காச்சுவானின் Battlefords-Lloydminster தொகுதி (Rosemarie Ashley Falk) கன்சவேட்டிவ் கட்சி வசமாகியது.

இந்த தேர்தல்கள் ஆளும் லிபரல் கட்சியின் தற்போதய மக்கள் ஆதரவு நிலைப்பாட்டினை கணிப்பீடு செய்யும் ஒரு நிகழ்வாகவே பரவலாக நோக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு வரப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான பரீட்சார்த்தமாகவும் இவ்இடைத்தேர்தல் கருதிக்கொள்ளப்பட்டது.