டொரோண்டோவில் கடும் குளிர் எச்சரிக்கை; விடுமுறை சந்தை மூடப்பட்டது.

ரொறொன்ரோ- நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் (Nathan Phillips Square) அமைக்கப்பட்டுள்ள விடுமுறை சந்தை ரொறொன்ரோவில் இன்று விடுக்கப்பட்ட கடும் குளிர் எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.


ரொறொன்ரோவின் வெப்பநிலை உறைநிலையின் ஈர்ப்பினால் குளிர் காற்றுடன் கூடி இன்று காலை முதல் -20 ஆக காணப்பட்டுள்ளது.

இந்நிலை காரணமாக நகரின் மருத்துவ அதிகாரிகள் அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகரின் வீடற்றவர்களின் நலன் கருதி புகலிடங்களில் மேலதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேவையற்று வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை சந்தையானது வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசம்பர் 23-வரை இந்த சந்தை திறந்திருக்கும்.

வெப்பமான வானிலை வார இறுதிநாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை -4 C,சனிக்கிழமை -5 C மற்றும் ஞாயிற்றுகிழமை -1 C ஆக காணப்படலாம்.