கல்விக்கட்டணங்கள் மீள வழங்கப்பட்டது!

ஒன்ராறியோ மாகாண கல்லூரி விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து ஐந்து கிழமைகள் நீடித்தமையினால் அக்காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி தடைப்பட்டது.


அண்மையில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், பல மாணவர்கள் தம் கல்விக்காக செலுத்திய தவணைக்கட்டணத்தை மீளக்கோரியதைத்தொடர்ந்து சுமார் 25,700 மாணவர்களின் தவணைக்கட்டணப்பணம் மீள வழங்கப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.