கத்திக்குத்தில் 4-மாத குழந்தையும் மற்றுமொருவரும் காயம்.

நான்கு மாத குழந்தை ஒன்றும் மனிதரொருவரும் எற்றோபிக்கோ பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் குத்தப்பட்டனர். இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்..


இன்று புதன்கிழமை காலை 8.35 மணியளவில் ஷெர்வே கார்டன்ஸ் வீதி மற்றும் இவான் அவெனியு (Sherway Gardens Road and Evans Avenue in suburban Etobicoke) பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது.

இருவரும் கட்டிடத்தின் வரவேற்பு கூடத்தில் அல்லது அருகாமையில் குத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்தை அடைந்த நேரத்தில் குழந்தை நினைவற்ற நிலையில் கிடந்ததாகவும் குழந்தை மிக கடுமையான முறையில் தாக்கப்பட்டது போல் தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றவர் அருகில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குழந்தையின் காயங்கள் உயிராபத்தானவை என அவசர மருத்துவ சேவையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் ஆயுதம் வைத்திருந்தார் எனவும் ஆபத்தானவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

பெண்ணை கைது செய்து விட்டதாக தெரிவித்த அதிகாரிகள் இவருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இச்சம்பவம் மிகவும் மோசமான ஒன்றென கருதப்படுகின்றது.