பீச் பழங்களை மட்டுமே உண்டு வாழும் மொன்றியல் சிறுவன்

மொன்றியலில் (Montreal, Canada) வசிக்கும் மிகா கேப்ரியல் (Micah Gabriel Masson Lopez) என்னும் 2 வயது சிறுவன் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பீச் பழங்களை மட்டும் உண்டு வாழ்கின்ற நிலை உருவாகியுள்ளது.


குறித்த சிறுவனுக்கு உணவு ஒவ்வாமை நோய் மரபணுகுறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பீச் பழங்களை தவிர வேறு எந்த உணவை உண்டாலும் இவனது உடல் ஏற்றுக்கொள்வதில்லையாம்.

இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில்.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் இவனுக்கு இந்த பிரச்சினை இருப்பது தெரியவந்தது. மிகவும் அன்பான குழந்தை. எதையும் சாப்பிட முடியாமல் தவிக்கின்றான்.உரம் போடாமல் இயற்கையாக விளைவிக்கப்படும் பீச் பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை.

ஆகையால் பழங்கள் கிடைக்கும் காலத்தில் வாங்கி மிகுதி காலத்திற்கும் பயன்படுத்துகின்றோம். இதற்கு அதிக செலவாகின்றது. எங்களிடம் வசதி இல்லாததால் செலவுகளை சமாளிக்க நன்கொடை திரட்டி வருகின்றோம் என தெரிவித்தார்.