கனடாவில் வறுமை ஒழிப்பு திட்டம்: அரசின் அதிரடி முடிவு

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள மக்களுக்கு அடிப்படை ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பிரீமியர் (Premier) Philippe Couillar குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் உள்ள சுமார் 84,000 பேர் குறித்த திட்டத்தினால் பலனடைவார்கள் என நம்பப்படுகிறது. குறிப்பாக போதிய வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், உடல் மற்றும் அறிவார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் இத்திட்டத்தில் பலனடைவார்கள். அத்துடன் பயன் பெறுபவர்களின் பொருளாதார நிலையும் உயரும் என Premier Philippe Couillar தெரிவித்துள்ளார்.

இத் திட்டமானது போதிய ஆதரவின்றி தனியாக வாழும் நபர்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் 2023 ஆம் ஆண்டில் 100,000 மக்களை வறுமையிலிருந்து மீட்க முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் வறுமை ஒழிப்பு அமைப்புக்கள் அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகிறது. வழங்கப்படும் ஆதரவானது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அரசின் இந்த திட்டத்தினால் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களின் ஆண்டு வருமானம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் 12,749 டொலரில் இருந்து 18,029 டொலர் வரை உயரும் என அரசு அறிவித்துள்ளது.