கனடாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக றிச்சட் வாஹ்னர்!

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ கனடா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கியுபெக்கில்-பிறந்த நீதிபதி றிச்சட் வாஹ்னரை (Richard Wagner) நியமனம் செய்துள்ளார்.


மொன்றியலில் பிறந்த 60-வயதுடைய வாஹ்னர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் 1979-ல் சட்ட பட்டத்தை பெற்றார்.

20-வருடங்களிற்கும் மேலாக சட்டத்துறையில் பணியாற்றியுள்ளார்.

கியுபெக் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். 2012ல் முன்னாள் பிரதம மந்திரி Stephen Harper இவரை உச்ச நீதிமன்றத்திற்கு நியமித்தார்.

இவர் முன்னாள் கியுபெக் அமைச்சரவை மந்திரியும் ஒரு-முறை மத்திய கூட்டாட்சி கன்சவேட்டிவ் தலைமை வேட்பாளருமான க்ளாட் வாஹ்னரின் நடு பிள்ளையாவார்.

தற்போதய தலைமை நீதிபதி பெவர்லி மக்லாச்லின் 28-வருட நீதிமன்ற சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். கிட்டத்தட்ட 18-வருடங்கள் தலைமை நீதிபதியாக இருந்தார்.

74-வயதுடைய மக்லாச்லின் உயர் நீதிமன்றத்தின் தலைமை பதவி வகித்த முதல் பெண் ஆவார். அத்துடன் கனடாவின் நீண்ட-காலம் கடமையாற்றிய தலைமை நீதிபதியும் இவராவார்.