எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு வழக்கு!

ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் (Premier Kathleen Wynne) எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு குறித்த வழக்கு தாக்கல் செய்துள்ளார். மாகாண தேர்தல் இடம்பெறுவதற்கு ஆறு மாதங்களிற்கு குறைவான காலம் இருக்கையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கடந்த செப்ரம்பரில் புரோகிறசிவ் கன்சவேட்டிவ் தலைவர் (PC Party) பற்றிக் பிறவுன் (Patrick Brown) தெரிவித்த கருத்துக்கள் குறித்து இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

சாட்சியாக சாட்சியமளிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இரண்டு மாகாண லிபரல் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர் நோக்கிய தேர்தல் சட்டத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனை சட்பெரி ஒன்ராறியோவில் இடம்பெற்ற போது வின் சாட்சியமளிப்பதற்கு ஒரு நாள் முன்னர் நடந்துள்ளது.

குறிப்பிட்ட ஊழல் சம்பந்தமாக வின் பதிலளிப்பார் என தான் நம்பியதாக பிரவுன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் “sitting premier, sitting in trial.” -பிரதமராக இருப்பவர் விசாரனையில் இருக்கின்றார்-எனவும் தெரிவித்ததாக அறியப்படுகின்றது.

முதல்வர் விசாரைனயில் இல்லை ஒரு சாட்சியாக உள்ளார் என கூறப்பட்டது.

இது குறித்து ரொறி தலைவர் மன்னிப்பு கோர மறுத்து விட்டார்.

வின்னின் வக்கீலிடமிருந்து அவதூறு வழக்கு அறிவிப்பு விடப்பட்டது. பிறவுனின் வக்கீல் அவதூறு அல்ல என தெரிவித்துள்ளார்.

வின்னின் சட்ட குழு மோசமான, முன்மாதிரியான மற்றும் தண்டனையான சேதங்கள் ஏற்படுத்தியமைக்காக 100,000 டொலர்கள் கோரி அறிக்கை ஒன்றை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது . பிரவுனின் அறிக்கை வின்னின் நற்பெயருக்கு பங்கம் விளைவித்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.