புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கனடாவின் கிரேட்டர் மான்ட்ரியல் பகுதியில் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியொன்று கொண்டாடப்பட்டுள்ளது. Leucan சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியானது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகள் உட்பட 400 நபர்களுடன் மகிழ்ச்சியாக இடம்பெற்றது.


இந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய குறித்த குழந்தைகளுக்காக சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா கிளாஸ் போன்ற ஏற்பாடுகளை Leucan சங்க இயக்குனர் Carol Beaudry பொறுப்பேற்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விழாவில் கலந்துகொண்ட Claudio Campilii என்ற பெண் கூறுகையில்…

அன்றாட வாழ்க்கையில் இருந்து சற்று மாற்றாக அமைந்த இந் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனது ஆறு வயது குழந்தையான Kayal-விற்கு Wilms tumour என்னும் சிறுநீரக புற்றுநோய் ஏற்பட்டமை 15 மாதத்திற்கு முன் கண்டறியப்பட்டது.

பல கட்டமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டும் புற்றுநோய் சரியாகவில்லை. எனவே தற்போது எங்கள் வாழ்க்கை மிகவும் சோகமான காலத்தில் இருப்பதால் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாடியிருப்போமா என்பது சந்தேகம்தான். ஆனால் எங்களை அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட வைத்த இந் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது. அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.