நான்கு தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்

கனேடிய பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொகுதி வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று (Dec 11, 2017) இடம்பெறுகின்றன.


  1. ஒன்ராறியோவில் Scarborough-Agincourt தொகுதி
  2. பிரிட்டிஷ் கொலம்பியாவில் South Surrey-White Rock தொகுதி,
  3. சாஸ்காச்சுவானின் Battlefords-Lloydminster தொகுதி
  4. Newfoundland and Labradorஇல் Bonavista-Burin-Trinity ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகளே இன்று நடைபெறுகின்றன.

இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அறிவிப்பினை கடந்த மாதம் பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau) வெளியிட்டிருந்த நிலையில், இன்று இடம்பெறும் இந்த தேர்தல்கள் ஆளும் லிபரல் கட்சியின் தற்போதய மக்கள் ஆதரவு நிலைப்பாட்டினை கணிப்பீடு செய்யும் ஒரு நிகழ்வாகவே பரவலாக நோக்கப்படுகிறது.

இவற்றில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பழமைவாதக் கட்சியின் கோட்டையாக விளங்கிய தொகுதியை கைப்பற்றுவதற்கு லிபரல் கட்சி பலத்த முயற்சிகளை மேறகொண்டுள்ள நிலையில், குறித்த இந்த தொகுதிக்கான வாக்குப் பதிவுகள் பலத்த எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்துள்ளன.

குறித்த அந்த தொகுதிக்கான பரப்புரைகளில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மற்றும் பழமைவாதக் கட்சித் தலைவர் ஆகியோர் நேரடியாக களமிறங்கி பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல சாஸ்காச்சுவான் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு பழமைவாதக் கட்சி பலத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், டொரோண்டோ உள்ளிட்ட ஏனைய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதில் லிபரல் கட்சிக்கு நெருக்கடி இருக்காது என்று கருதப்படுகிறது.