தீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்!

தீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்..


ஈழத்தில் பூர்வீகக் குடிகளைக் கொண்டவர்கள் தமிழர்கள் இலங்கைத்தீவு முழுவதுமே தமிழரின் ஆட்ச்சிக்கு உட்ப்பட்டது என்பதும் ஈழம் என்ற சொல் இன்று நேற்று உருவானதல்ல 3000வருடங்களுக்கு முன்பே உருவானது தமிழர்கள் அரச அங்கீகாரத்துடன் வாழ்ந்தவர்கள். இலங்கைத்தீவு அதாவது தீபகற்ப்பம் என அழைக்கப்படும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம் என ஈழம் பற்றி விளக்கவுரையாற்றிய பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் விளக்கவுரையின் போது குறிப்பிட்டார்.

தமிழரின் அரசியல் தீர்வும் யாப்பு நடைமுறையும் , ஈழத்தமிழரின் பூர்வீக வரலாற்று பின்னனியுமாக நேற்று டிசம்பர் 8ஆம் திகதி 2017 அன்று மாலை 6.30 மணிக்கு இசுகாபுரோ சிவிக் சென்ரரில் தளிர் ஆசிரியர் சி.சிவமோகன் , மூதறிஞர் மு.க.தமிழ் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஈழத்தின் பூர்வீக வரலாறும் தமிழரின் அரசியல் ஆழுமையும் பற்றி கருத்துரைகள் முன் வைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் மேலும் உரையாற்றுகையில் ஈழம் என்ற சொல்லில் உலகத்தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகள் கூட உள்வாங்கப்பட்டு இருக்கிறது. இதனை குழப்பும் ஒரு நோக்காகவே பூர்வீகத்தமிழர்களின் வரலாற்றை திரிவு படுத்தி எழுதப்பட்டதே மகா வம்சம் ஆகும் இந்த மகா வம்சத்தினை தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதனை தெளிவாகவும் ஆணித்தனமாகவும் தனதுரையில் ஆய்வுகளை முன் வைத்து உரையாற்றினார்.

ஆரம்ப நிகழ்வாக தமிழுக்கும் விடுதலைப் போரிலும் தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் உட்ப்பட சிங்கள பேரின வாத கடற்ப்படைகளால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்து தமிழ் தேசப்பற்றுடனும் தமிழுக்காகவும் வாழ்ந்து மறைந்த அனைத்து தமிழ் பற்றாளர்களுக்கும் ஒரு நிமிடம் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வுகளை முன்னோக்கி நகர்த்தி சென்ற தளிர் ஆசிரியர் சிவமோகன் கருத்தாடலின் விதி முறைகளையும் தமிழர்களின் அரசியல் பிரிவினைகள் மற்றும் முடிக்குரிய தமிழரின் அரசாட்சி தொடக்கம் இன்றுவரை பேரின வல்லரசு சுகளாலும் தமிழர்கள் பிரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் பெரும் பாண்மையான தமிழ் இனத்தினை சிறுபாண்மையினமாக ஒரம் கட்டப்பட்டதனையும் கால காலமாக தமிழர்கள் எப்படி அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டார்கள் என்பதனையும் விதைந்துரைத்து நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

மற்றும் கனடிய ஊடகத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிவருபவரும் வானொலித்துறையில் அறிவிப்பாளராகவும் சமூக ஆர்வலராகவும். கனடிய கென்சவேட்டி பாட்டியின் ஒரு அரசியல் உறுப்பினராகவும் வலம் வரும் ராகவன் பரஞ்சோதி அவர்கள். நிகழ்வின் முகவுரையில் குறிப்பிடுகையில் வரலாற்றின் திரிபுகள் பற்றியும் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

மற்றும் மூதறிஞர் ஊடகம், பறை ஊடகம் மு.க.தமிழ் அவர்கள் உரையாற்றுகையில் ஊடகங்கள் இந் நிகழ்வினை முன்னெடுப்புக்கான காரணம் பற்றியும் அதன் தார்ப்பரிகம் பற்றியும் தமிழின் தொன்மைகளையும் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து யாழ்ப்பாண அரசு ஆட்சி பற்றி தமிழ் ஆசிரியர் வேந்தன் பேரின்பநாதன் கருத்துரை வழங்கினார் மற்றும் கண்டி அரசு பற்றி மொழிப்பற்றாளரான ஆசிரியர் ராசநாதன் கந்தசாமி அவர்களின் கருத்துரைரையினை தொடர்ந்து வரலாற்று கல் வெட்டுக்களும் தமிழரின் அடையாளங்களும் பற்றி சேனாதி சிவராசா அவர்களின் கருத்துரையுடன் நிகழ்வின் இறுதிச் சுற்றினை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதியான ஈழவேந்தன் அவர்கள் சுற்றறிக்கையும் நிகழ்வின் தொகுப்பாகவும் உரையாற்றினார்.

இந் நிகழ்விற்க்கு ஊடகங்களான கனடா வாராந்த பத்திரிகை உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், வண்ணத்தமிழ் வானொலி சார்பாக ராகவன் பரஞ்சோதி , ஈசீ24நீயூசு.கொம் கிருபா கிருசான் மற்றும் சிரிபிசி கிருசுணலிங்ம், அகில் சாம்பசிவம் ஆகியோர் ஊடகம் சார்பாக வருகை தந்ததனை காணக்கூடியதாக இருந்தது

மற்றும் கனடிய தமிழர் தேசிய அவை பிரதி நிதிகள் , நாடுகடந்த தமிழீழ அரச பிரதி நிதிகள் , கனடிய தமிழ் தாய் மண்ற உறுப்பினர்கள்,கனடிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் பிரதி நிதிகள், தமிழ் ஆர்வலர்கள். வைத்தியர்கள் சட்டத்தரணி. என குறைந்த எண்ணிக்கையினை கொண்டு காணப்பட்ட மக்களின் பங்களிப்பின் போதும் அறிவியல் ரீதியாகவும் சக்திமிக்க ஒரு கூட்டத்தொடரின் பலம்மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது என்பது மிகையாகது.

Courtesy: தளிர் நிசான்